வனதேவதையை காப்போம்....

பனித்துளி சங்கரின் "எல் நினோ" பதிவின் தொடர்ச்சியாக எழுதபடுவது...


மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு அவசியமானது பஞ்ச பூதங்கள்: நீர்,நிலம்,நெருப்பு,ஆகாயம்,காற்று (சரியாதானே சொல்லி இருக்கேன்!!??). ஒன்றை ஒன்று சார்ந்தும் இருக்கும்,ஒன்று மிகையானால் அழிவிலும் முடியும். மனிதனுக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட இயற்கை வரங்கள் இவை. மனிதனின் வாழ்வு செழிக்க இவ்வைந்தையும் ஒரு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.


அனால் நம் மக்களோ அவர்களின் தினசரி தேவையை மட்டுமே மனதில்கொண்டு இயற்கையை அழிக்கிறார்கள்.மக்கள்தொகை பெருக்கத்தால் மட்டுமே காடுகள் அழிக்கப்பட்டு வீடுகள் ஆவதில்லை.இது இன்று நேற்று ஆரம்பித்ததும் அல்ல. காடுகளை அழிப்பது என்ற சுபநிகழ்ச்சி நம் முன்னோடிகளான ஆங்கிலேயர்களால் 19 ம் நூற்றாண்டின் ஒரு சுபயோக சுபதினத்தில் துவங்கி வைக்க பட்டது. 

தாமஸ்  முன்ரோ என்பவர் 1823 ம் ஆண்டு நம் நாட்டில் காடுகளின் அழிவிற்கு வழிவகுத்த புண்ணியவான். அவர் ஆட்சி காலத்தில் மரங்களை வியாபார நோக்கத்துடன் வேட்டி வீழ்த்த ஆரம்பித்தனர். பின் வந்த லார்ட் டல்ஹௌசி என்பவர் இந்த தவறை மாற்ற நினைத்தாலும் இன்றைய நூற்றாண்டு வரை நீடித்துதான் வருகிறது. மேலும் அவர்கள் தந்த பாலங்களும், சாலை வசதிகளும், வாகன வசதிகளும் இதற்கு துணையாக நின்றன.


சுதந்திரத்திற்கு பிறகாவது நம் தலைவர்கள் இந்நிலையை மாற்றினார்களா என்றால் இல்லையென்றுதான் சொல்லவேண்டும். சுதந்திரத்திற்கு பின் நம் நாட்டின் தொழில் வளர்ச்சி ஒரு நிலையை எட்டியது.அது மேலும் வளரவும், புதிய தொழில்கள் உருவாகவும் இட வசதியும், கட்டுமான வசதியும் தேவை பட்டது. இவற்றிற்கு மரங்களும், மரங்கள் நிறைந்த காடுகளுமே உரமாகின, உணவாகின. காடுகளின் பாதுகாப்பிற்காக கொண்டு வரப்பட்ட சட்டங்களும் சம்பிரதாயங்களாகவே உள்ளன.கிராமங்களில் மக்கள் நேருப்பிக்காக மரங்களை வேட்டி விரகுகளாக்குவதும், வீடு கட்டுவதற்கும், பல விலையுயர்ந்த மரங்கள் தொழில் லாபத்திக்காகவும், மக்களின் தங்கு வசதிக்காகவும் என பல காரணங்களில் காடுகள் அழிக்க படுகின்றன. அவற்றின் அழிவால் மக்கள் மழையை மட்டும் இழப்பதில்லை, பல காடுகளில் வாழும் பழங்குடியினர் தன் தாய் நாட்டிலேயே அகதிகளாக்க படுகின்றனர். இது பலருக்கு தெரிவதுமில்லை, தெரிந்த பலர் உணர்வதுமில்லை.


நகரங்களின் மேம்பாட்டிற்காக வேட்டுமரங்கள், எரிபொருளுக்கு பயன்படும் மரங்களின் தேவைகள் அதிகரித்தன. இத்தேவையை நிறைவேற்ற 1950-51 இல் 7180 ஆயிரம் கோடி சதுர பரப்பளவில் இருந்த காட்டிலாகாவின் நிலம் 1979-80 இல் 7460 ஆயிரம் கோடி சதுர பரப்பளவாக அதிகரித்தது. காட்டிலாக்கா 1970-71 இல் 43 ஆயிரம் கோடி நிலபரப்பை இழந்தாலும் 1950-51 ஐ விட 5 மடங்கு லாபத்தை ஈட்டியது. 60 களில் மரங்களை வேட்டி வியாபாரமாக்குவது ஒரு சிகரத்தையே தொட்டது. இரண்டாம் உலக போருக்கு பின் சில இயற்கை காரணங்களால்  தேவையின் அதிகரிப்பிற்கு ஏற்ப மரங்களின் வளர்ச்சி இல்லையென அரசாங்கம் கண்டறிந்தது. இதனால் மேன்மேலும் மரங்களை வெட்டுவதற்கு 1988 இல் ஒரு தடை சட்டம் கொண்டு வரப்பட்டது.


ஆயினும், சமீபத்தில் எடுத்த ஒரு கணக்கெடுப்பின் படி வடஇந்தியாவில் 2969 சதுர கிலோமீட்டரும், அசாமில் 2788 சதுர கிலோமீட்டரும் ஆந்திராவில் 1788 சதுர கிலோமீட்டருமாக காடுகளின் அழிவு குறிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி காடுகளின் பாதுக்கப்பிற்காக கொடுக்கும் பணமும் சொற்பமாகவே அதற்கு உபயோகபடுத்த படுகிறது.காடுகளின் பாதுகாப்பிக்காக இருக்கும் அதிகாரிகளும் லஞ்சத்திற்காக செய்யும் தவறுகள் அதிகரித்தே வருகின்றன. காட்டுக்குள் நடக்கும் பல திருட்டுகளும், அது மீறல்களும் இதனால் வெளிச்சத்திற்கே வருவதில்லை.

ஒரு பக்கம் விழிப்புணர்ச்சி முகாம்கள் அமைக்கபட்டாலும் மறுபக்கம் காடுகளின் அழிவு தடுக்கமுடியாத ஒன்றாகி விட்டது என்றே கூற வேண்டும். 


ஊர்ல நல்லவங்க நல்லு பேர் இருந்தாதான் மழை பெய்யும்னு சொல்லுவாங்க.அதுக்கு பொருள் நல்லவங்களா இருந்தாதான் இருக்குற  மரங்களை வெட்டாம அவங்களால முடிஞ்சா அளவுக்கு புதுசா மரங்களையும் வளப்பாங்க. அதுனால ஊர்ல மழையும் பெய்யும் அப்படீங்கறதுதான்
( என்னென்னமோ தோணுது போங்க!!!).


"மரங்களின்றி மழை இல்லை.
மழையின்றி மனிதனில்லை
மனிதனின் சுவாசமில்லை...."  (கவித...கவித...)


எவ்வளவுதான் தேவைகள் கூடினாலும் இயற்கையை அழிப்பதென்பது "நம் விரல்களால் நாமே நம் கண்களை காயபடுத்துவது" போலாகும். இதனை உணர்ந்து "உபயோகம் செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருப்பது நன்று"(ஆங்!!பழமொழியெல்லாம் வருது ) என்பது போல வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்காவிட்டாலும் காட்டில் இருக்கும் மரங்களையாவது அழிக்காமல் இருந்தாலே நல்லது செய்வது போலாகும்.


எதோ என்னால முடிஞ்சத படிச்சி புடிச்சி எழுதிட்டேன். இத்தொடர் பதிவு எழுத்தோட நிக்காமலும்,படிக்கிறவங்களுக்கு படிப்போட நிக்காமலும் ஏதாவது நல்லது நடந்தா  சந்தோஷம்தாங்க.

Reactions: 

2 Response to "வனதேவதையை காப்போம்...."

 1. அமைதி அப்பா says:
  11 May 2010 at 2:47 AM

  //எதோ என்னால முடிஞ்சத படிச்சி புடிச்சி எழுதிட்டேன். இத்தொடர் பதிவு எழுத்தோட நிக்காமலும்,படிக்கிறவங்களுக்கு படிப்போட நிக்காமலும் ஏதாவது நல்லது நடந்தா சந்தோஷம்தாங்க.//


  மேடம், உங்களோட உண்மையான அக்கறை நன்றாக புரிகிறது. நல்ல பகிர்வு. நன்றி.

 2. அன்புடன் மலிக்கா says:
  24 January 2011 at 10:17 PM

  நல்லதொரு கட்டுரை . தொடர்ந்து எழுதுங்கள்..வாழ்த்துக்கள்.

Post a Comment