வனதேவதையை காப்போம்....

பனித்துளி சங்கரின் "எல் நினோ" பதிவின் தொடர்ச்சியாக எழுதபடுவது...


மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு அவசியமானது பஞ்ச பூதங்கள்: நீர்,நிலம்,நெருப்பு,ஆகாயம்,காற்று (சரியாதானே சொல்லி இருக்கேன்!!??). ஒன்றை ஒன்று சார்ந்தும் இருக்கும்,ஒன்று மிகையானால் அழிவிலும் முடியும். மனிதனுக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட இயற்கை வரங்கள் இவை. மனிதனின் வாழ்வு செழிக்க இவ்வைந்தையும் ஒரு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.


அனால் நம் மக்களோ அவர்களின் தினசரி தேவையை மட்டுமே மனதில்கொண்டு இயற்கையை அழிக்கிறார்கள்.மக்கள்தொகை பெருக்கத்தால் மட்டுமே காடுகள் அழிக்கப்பட்டு வீடுகள் ஆவதில்லை.இது இன்று நேற்று ஆரம்பித்ததும் அல்ல. காடுகளை அழிப்பது என்ற சுபநிகழ்ச்சி நம் முன்னோடிகளான ஆங்கிலேயர்களால் 19 ம் நூற்றாண்டின் ஒரு சுபயோக சுபதினத்தில் துவங்கி வைக்க பட்டது. 

தாமஸ்  முன்ரோ என்பவர் 1823 ம் ஆண்டு நம் நாட்டில் காடுகளின் அழிவிற்கு வழிவகுத்த புண்ணியவான். அவர் ஆட்சி காலத்தில் மரங்களை வியாபார நோக்கத்துடன் வேட்டி வீழ்த்த ஆரம்பித்தனர். பின் வந்த லார்ட் டல்ஹௌசி என்பவர் இந்த தவறை மாற்ற நினைத்தாலும் இன்றைய நூற்றாண்டு வரை நீடித்துதான் வருகிறது. மேலும் அவர்கள் தந்த பாலங்களும், சாலை வசதிகளும், வாகன வசதிகளும் இதற்கு துணையாக நின்றன.


சுதந்திரத்திற்கு பிறகாவது நம் தலைவர்கள் இந்நிலையை மாற்றினார்களா என்றால் இல்லையென்றுதான் சொல்லவேண்டும். சுதந்திரத்திற்கு பின் நம் நாட்டின் தொழில் வளர்ச்சி ஒரு நிலையை எட்டியது.அது மேலும் வளரவும், புதிய தொழில்கள் உருவாகவும் இட வசதியும், கட்டுமான வசதியும் தேவை பட்டது. இவற்றிற்கு மரங்களும், மரங்கள் நிறைந்த காடுகளுமே உரமாகின, உணவாகின. காடுகளின் பாதுகாப்பிற்காக கொண்டு வரப்பட்ட சட்டங்களும் சம்பிரதாயங்களாகவே உள்ளன.



கிராமங்களில் மக்கள் நேருப்பிக்காக மரங்களை வேட்டி விரகுகளாக்குவதும், வீடு கட்டுவதற்கும், பல விலையுயர்ந்த மரங்கள் தொழில் லாபத்திக்காகவும், மக்களின் தங்கு வசதிக்காகவும் என பல காரணங்களில் காடுகள் அழிக்க படுகின்றன. அவற்றின் அழிவால் மக்கள் மழையை மட்டும் இழப்பதில்லை, பல காடுகளில் வாழும் பழங்குடியினர் தன் தாய் நாட்டிலேயே அகதிகளாக்க படுகின்றனர். இது பலருக்கு தெரிவதுமில்லை, தெரிந்த பலர் உணர்வதுமில்லை.


நகரங்களின் மேம்பாட்டிற்காக வேட்டுமரங்கள், எரிபொருளுக்கு பயன்படும் மரங்களின் தேவைகள் அதிகரித்தன. இத்தேவையை நிறைவேற்ற 1950-51 இல் 7180 ஆயிரம் கோடி சதுர பரப்பளவில் இருந்த காட்டிலாகாவின் நிலம் 1979-80 இல் 7460 ஆயிரம் கோடி சதுர பரப்பளவாக அதிகரித்தது. காட்டிலாக்கா 1970-71 இல் 43 ஆயிரம் கோடி நிலபரப்பை இழந்தாலும் 1950-51 ஐ விட 5 மடங்கு லாபத்தை ஈட்டியது. 60 களில் மரங்களை வேட்டி வியாபாரமாக்குவது ஒரு சிகரத்தையே தொட்டது. இரண்டாம் உலக போருக்கு பின் சில இயற்கை காரணங்களால்  தேவையின் அதிகரிப்பிற்கு ஏற்ப மரங்களின் வளர்ச்சி இல்லையென அரசாங்கம் கண்டறிந்தது. இதனால் மேன்மேலும் மரங்களை வெட்டுவதற்கு 1988 இல் ஒரு தடை சட்டம் கொண்டு வரப்பட்டது.


ஆயினும், சமீபத்தில் எடுத்த ஒரு கணக்கெடுப்பின் படி வடஇந்தியாவில் 2969 சதுர கிலோமீட்டரும், அசாமில் 2788 சதுர கிலோமீட்டரும் ஆந்திராவில் 1788 சதுர கிலோமீட்டருமாக காடுகளின் அழிவு குறிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி காடுகளின் பாதுக்கப்பிற்காக கொடுக்கும் பணமும் சொற்பமாகவே அதற்கு உபயோகபடுத்த படுகிறது.காடுகளின் பாதுகாப்பிக்காக இருக்கும் அதிகாரிகளும் லஞ்சத்திற்காக செய்யும் தவறுகள் அதிகரித்தே வருகின்றன. காட்டுக்குள் நடக்கும் பல திருட்டுகளும், அது மீறல்களும் இதனால் வெளிச்சத்திற்கே வருவதில்லை.





ஒரு பக்கம் விழிப்புணர்ச்சி முகாம்கள் அமைக்கபட்டாலும் மறுபக்கம் காடுகளின் அழிவு தடுக்கமுடியாத ஒன்றாகி விட்டது என்றே கூற வேண்டும். 


ஊர்ல நல்லவங்க நல்லு பேர் இருந்தாதான் மழை பெய்யும்னு சொல்லுவாங்க.அதுக்கு பொருள் நல்லவங்களா இருந்தாதான் இருக்குற  மரங்களை வெட்டாம அவங்களால முடிஞ்சா அளவுக்கு புதுசா மரங்களையும் வளப்பாங்க. அதுனால ஊர்ல மழையும் பெய்யும் அப்படீங்கறதுதான்
( என்னென்னமோ தோணுது போங்க!!!).


"மரங்களின்றி மழை இல்லை.
மழையின்றி மனிதனில்லை
மனிதனின் சுவாசமில்லை...."  (கவித...கவித...)


எவ்வளவுதான் தேவைகள் கூடினாலும் இயற்கையை அழிப்பதென்பது "நம் விரல்களால் நாமே நம் கண்களை காயபடுத்துவது" போலாகும். இதனை உணர்ந்து "உபயோகம் செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருப்பது நன்று"(ஆங்!!பழமொழியெல்லாம் வருது ) என்பது போல வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்காவிட்டாலும் காட்டில் இருக்கும் மரங்களையாவது அழிக்காமல் இருந்தாலே நல்லது செய்வது போலாகும்.


எதோ என்னால முடிஞ்சத படிச்சி புடிச்சி எழுதிட்டேன். இத்தொடர் பதிவு எழுத்தோட நிக்காமலும்,படிக்கிறவங்களுக்கு படிப்போட நிக்காமலும் ஏதாவது நல்லது நடந்தா  சந்தோஷம்தாங்க.

தலைகனம் இல்லாதவர்

தங்க தட்டென தகிக்கும் சூரியனை தனக்குள் அடக்கிவிடும்...



பல கவிஞர்களின் சிந்தனை சுரங்கம்
காதலர்களின் துணைவன்
குழந்தைகளின் பிரம்மாண்டம்

மீனவர்களின் மாதா, பிதா, குரு, தெய்வம்
வீடற்றவர்களின் குளியலறை
ஏழை மக்களின் வியாபார ஸ்தலம்

விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி சுரங்கம்
வியாபாரிகளின் பரிவர்த்தனை சாலை
நாடுகளுக்கோ எல்லைகோடு

கோடானுகோடி உயிர்களின் வாழ்விடம்
சிலருக்கு வாழ்க்கையின் ஆரம்பம்
சிலருக்கு வாழ்க்கையின் முடிவு...

இன்னும் எத்தனையோ பெருமைகளுடன்
அமைதியாய் ....
கடல்.!!!

காதல்கள்...

பள்ளி பருவத்திலே 
பசுந்தென்றல் காதலடி...
சேர்ந்து படிப்பவர், 
தூர நடிப்பவர் அழகாய் இருந்தால்
மனதில் சாரலொன்று  அடிக்குதடி...


School children





கல்லூரி நாட்களிலே
இளம் பருவத்தின் 
உச்சத்திலே
சிரிப்பவரும்,சிறந்து 
விளங்குபவரும்
காதலராய் உருவங்
கொண்டு மயங்கவும்
வைத்தார்களடி...

love pair



மூத்த இளம் வயதினிலே
தெளிவுற்ற நெஞ்சமது
தேனடையாய் தேங்குதடி
ஆசைதனை சேர்க்குதடி...





கனவில் கூட தந்தை வந்து
மிரட்டுவதே தெரியுதடி
கனவு காதலில் 
மின்சார வெட்டு நிகழுதடி...


இத்தனை நாளும் கண்ட காதல்
மனதுக்குள்ளே கொண்ட காதல்
கானல் நீராய் மறையுதடி...


Free Desert Sun Screensaver 1.0

விடிந்தெழுந்து பார்க்கயிலே
குழந்தை அருகில் 
உறங்குதடி
துணையோ தேநீர் 
கொடுக்கிறாளடி....


touched father looking on his sleeping son


அந்த கானல் நீரின் 
காதலையும் 
இத்தேநீர் காதல்
வெல்லுதடி
வெல்லமாய் 
மனதினில் இனிக்குதடி...


1600*1200  Children's illustration of Mother Day and Family Love - 1680*1050 Happy family love -  Lovely Art illustration for Mother's day15

கொத்து சப்பாத்தி

தேவையானவை:

சப்பாத்தி - 8
எண்ணெய் - 4 தேக்கரண்டி
வெங்காயம் - 1 (பெரியது,பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
காரட் - 1 (துருவியது)
ப.மிளகாய் - 2
முட்டை - 2
மிளகு தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - தேவையான அளவு
கொத்துமல்லி தழை - தேவையான அளவு
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி

செய்முறை:

1. சப்பாத்தியை தோசைக்கல்லில் இட்டு எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு உளுந்து தாளிக்கவும்.
3. பின் கருவேப்பிலை, ப.மிளகாய் மற்றும் வெங்காயம் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
4. இத்துடன் கொத்துமல்லி, தக்காளி மற்றும் காரட் மூன்றையும் சேர்த்து வதக்கவும்.இவை வதங்கியவுடன் மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி சப்பாத்தியை கலந்து கிளறி விடவும்.
5. சப்பாத்தி நன்றாக வதங்கிய பதத்திற்கு வந்தவுடன் இரண்டு முட்டைகளையும் உடைத்து அதில் ஊற்றி கிளறவும்.
6. சப்பாத்தி கட்டி பிடிக்காமல் உதிரியாக இருக்கும்படி கிளறிவிடவும். முட்டை சப்பாத்தியுடன் கலந்து பொரிந்த பதத்திற்கு வந்ததும் கொத்து சப்பாத்தி தயார்.

பி.கு 1 : சிக்கன் குருமா இருந்தால் ஒரு குழம்பு கரண்டி அளவிற்கு ஊற்றி கிளறி விட்டால் சுவை நன்றாக இருக்கும்.
பி.கு 2 : சைவப்பிரியர்கள் முட்டைக்கு பதில் பீன்ஸ் முட்டை கோஸ் ஆகியவற்றை பொடியாக நறுக்கி காரட்டுடன் சேர்த்து வதக்கிவிட்டு பின் கூறியவற்றை போல சேய்துக்கொள்ளலாம்.
பி.கு 3 : மசாலா வாசம் வேண்டுமென்றால் இரண்டு பட்டை, கிராம்பு தாளித்து, இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக்கொள்ளவும்.
பி.கு 4 : சப்பாத்திக்கு பதிலாக பரோட்டாவை சேர்த்து கொண்டால் கொத்து பரோட்டா தயார்.


பின் குறிப்பே ஒரு செய்முறை அளவுக்கு இருக்குன்னு நீங்க ஏசுறது எனக்கு கேக்குது.இருந்தாலும் உங்களுக்கு கொஞ்சம் டிப்ஸ் தரலாமேன்னுதான்....கோவிச்சுக்காதீங்க... :) :)

சொர்க்கமும்,நரகமும்...

வான்மகளின் நீல அழகில்
கதிரவன் ஓங்கி நின்று நிலமகளின்
அழகினை ரசிப்பதுவும்...

காலைப்பனியும்
அதில் நனைந்த மண் சாலையும் ,மலர்களும்
தென்னஞ்சோலையும்
அதின் சில்லென்ற காற்றும்

குருவிகளின் கூடும்
அதை போன்ற
குடிசை வீடுகளும்
சாணத்தின் வாசனையில்
மின்னிடும் வண்ணக்கோலங்களும்

கூடிவிளையாடும் குழந்தைகளும்
ஆடிப்பாடும் பருவப்பேண்டிரும்

கிராமத்தின் அழகே
கண்கொள்ளாக் காட்சியன்றோ
மனம்
கொள்ளை போகும் வாழ்க்கையன்றோ...


இரவும் பகலும் தெரியா
நகரத்தில்
நேரம் குறித்து விடியல் கண்டு
மாசு நிறைத்த வாகனப் புகையில்
நாற்றம் சகித்து
அலுவல் செல்லும்
மனிதர்களும்,
கூடிவிளையாட நேரமின்றி
புத்தக போதியினிலே புதையும்
குழந்தைகளும்,
அந்தோ கொடுமையன்றோ...

மக்கள் தொகையின்
அடர்த்தியினால்
வீதிகள் என்ற சந்துகளில் மக்கள்
நெரிந்து வாழும் வாழ்க்கையும்
மனத்தைக் கொள்ளும் காட்சியன்றோ...

கிராமத்து தேவதையின்
வரமற்ற எந்நகரமும்
நரகம்தானே...

"பையா" ஒரு அனுபவம்

முன்குறிப்பு:
இங்கு (US) வந்த ஒரு மாதமாய் எங்களுக்கு அனைத்து வகையிலும் பேருதவியாய் இருக்கும் திரு. பிரகாஷ் (என் கணவரின் நண்பர்) அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

"பையா" ஒரு அனுபவம்:

எனக்கு ஒரு படமாவது முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாளாக உண்டு. பல சூழ்நிலைத் தடைகளினால் அது நிராசையாகவே இருந்து வந்தது. பள்ளி பருவத்திலும் சரி, கல்லூரி நாட்களிலும் சரி இது மட்டும் நிறைவேறவே இல்லை.

அனால் சென்ற வாரம் வெள்ளிகிழமையில் அது நிறைவேறியது. அதுவும் இரவு காட்சி. கேட்கவா வேண்டும்??மனம் குழந்தையாய் மாறி குதூகலித்தது. 40 நிமிட பயணம். அழகாய் தானிருந்தது.

"பையா" முன் பாதி இளமையின் துள்ளலும், பின் பாதி காதலின் வேகமும் நிறைந்திருந்தது. பழமை கதையை, புதிய காட்சி திறனோடு அருமையாக கொடுத்திருகின்றார்கள். இயற்கை ரசிகர்களுக்கு இப்படத்தில் வரும் பல இடங்கள் கண்களுக்கு விருந்து. யுவனின் இசை மழையில் அனைத்துப் பாடல்களும் மீண்டும் கேட்க தூண்டும்.
படம் மிக வேகமாக முடிந்தது. மீண்டும் வீட்டிற்கு வருகையில் அந்த கார் பயணம் நமக்கு படத்தை நினைவுப் படுத்தியது.

நீண்ட நாள் ஆசையும் நிறைவேறியது, பார்க்கத்தகுந்த படமும் அமைந்தது என் அதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன்.

என்ன நண்பர்களே நான் சொல்வது?

இதுதாங்க என்னோட capsicum egg pepper...





நல்லா எண்ணெயிலேயே வதக்குநீங்கன்னா சுப்பர் டேஸ்டுங்க.........ட்ரை பண்ணி பாருங்க மக்களே............