காதல்கள்...

பள்ளி பருவத்திலே 
பசுந்தென்றல் காதலடி...
சேர்ந்து படிப்பவர், 
தூர நடிப்பவர் அழகாய் இருந்தால்
மனதில் சாரலொன்று  அடிக்குதடி...


School children

கல்லூரி நாட்களிலே
இளம் பருவத்தின் 
உச்சத்திலே
சிரிப்பவரும்,சிறந்து 
விளங்குபவரும்
காதலராய் உருவங்
கொண்டு மயங்கவும்
வைத்தார்களடி...

love pairமூத்த இளம் வயதினிலே
தெளிவுற்ற நெஞ்சமது
தேனடையாய் தேங்குதடி
ஆசைதனை சேர்க்குதடி...

கனவில் கூட தந்தை வந்து
மிரட்டுவதே தெரியுதடி
கனவு காதலில் 
மின்சார வெட்டு நிகழுதடி...


இத்தனை நாளும் கண்ட காதல்
மனதுக்குள்ளே கொண்ட காதல்
கானல் நீராய் மறையுதடி...


Free Desert Sun Screensaver 1.0

விடிந்தெழுந்து பார்க்கயிலே
குழந்தை அருகில் 
உறங்குதடி
துணையோ தேநீர் 
கொடுக்கிறாளடி....


touched father looking on his sleeping son


அந்த கானல் நீரின் 
காதலையும் 
இத்தேநீர் காதல்
வெல்லுதடி
வெல்லமாய் 
மனதினில் இனிக்குதடி...


1600*1200 Children's illustration of Mother Day and Family Love - 1680*1050 Happy family love - Lovely Art illustration for Mother's day15

Reactions: 

4 Response to "காதல்கள்..."

 1. ஜீவன்பென்னி says:
  27 April 2010 at 1:16 PM

  //அந்த கானல் நீரின்
  காதலையும்
  இத்தேநீர் காதல்
  வெல்லுதடி
  வெல்லமாய்
  மனதினில் இனிக்குதடி...//

  :)

  பதிவுகள் மெருகேறிக்கொண்டே வருகின்றது.

 2. பாரதி பரணி says:
  27 April 2010 at 2:23 PM

  உங்கள் ஊக்கம் + ஆதரவின் வெளிப்பாடு ஜீவன்பென்னி

 3. நான் தமிழன் says:
  2 May 2010 at 6:32 AM

  டச் பண்ணிடிங்களே உடுக்கை ...

 4. பாரதி பரணி says:
  5 May 2010 at 4:28 PM

  //டச் பண்ணிடிங்களே உடுக்கை ...(நான் தமிழன்)//

  ஐயோ!!! நான் பாட்டுக்கு செவனேன்னு இருக்கேன்...நீங்க வேற... :-)
  நன்றிங்க கருத்துக்கு...

Post a Comment