என் முதல் பதிவு

தினமொரு(ரே) பொழுது………………

உன் முகம் பார்த்து

என் விடியல்

நீ அலுவலகம் செல்கையில்

என் அந்திமம்

கோடையின் சாரலைப்போல்

நீ வரும் உணவு வேளை

கதிரவன் சாய்கையில்

உன் வருகை

குழந்தையின் உற்சாகமாய்

உன்னுடன் நடைப்பயிற்சி

உன் அலுவலில் என் கவனம்

என் தனிமையில் உன் மனம்

என்றும்போல் உன் புகழோடு

நம் இரவு உணவு

நீ உறங்கையில்

எனக்கு ஆரம்பம்

ஆகிறது,

அடுத்த நாளுக்கான

தனிமை ஒத்திகை.........

Reactions: 

4 Response to "என் முதல் பதிவு"

 1. பழமைபேசி says:
  9 April 2010 at 5:16 PM

  அய்யே... அப்படி எல்லாம் சொல்லாதீங்க... வலையுலகம் இருக்கிற வரைக்கும் நீங்க தனியாள் கிடையாதுங்க!!

 2. Udukkai says:
  10 April 2010 at 9:11 AM

  உங்கள் ஆதரவுக்கு மிக்க ரொம்ப நன்றிங்க.
  சந்தோஷமா இருக்குங்க...
  கண்கள் கலங்கிடுச்சி...

 3. ஜீவன்பென்னி says:
  10 April 2010 at 9:50 AM

  aama neenga thani aalu illa. ungala suththi aayirakkanakkaanor irukkanga.

 4. முகுந்த் அம்மா says:
  11 April 2010 at 8:54 PM

  Well written kavithai. Dont worry we are all here.

Post a Comment