அமெரிக்காவுக்கு நானும்தானே போனேன் ...

அப்பப்பா..............ஒரு பதிவ கொடுகறதுக்குள்ள நம்ம பெண்டு நிமிந்துடுச்சு.......பல தலைங்க அசராம பதிஞ்சிக்கிடே இருகைங்கப்பா.......உஸ்ஸ்ஸ்.........சரி நம்ம மட்டேருக்கு வருவோம்...

நானும் எங்க வீட்டுக்காரரும் மெட்ராஸ்லதாம்ப்பா இருந்தோம்.அவரும் சளைக்காம IT கம்பெனில வேலப்பாக்க போயிட்டு இருந்தாரு....இந்த onsitu onsitu ன்னு ஒன்னு சொல்லுவாங்களே அது இவரு கேட்டப்பல்லாம் வரல....எனக்கு வேலை கெடச்சு நாங்க onsitu வேண்டாம்னு நேனச்சப்பதான் வந்துச்சு....

ஒரு வழியா அமெரிக்கால அட்லாண்டான்னு ஒரு எடத்துக்கு வந்து சேந்தோம்.ஒரு மாசமாச்சு....என்னா குளுரு...ஒருத்தங்களையும் வெளிய பார்க்கமுடியனுமே ...பொழுது போவாமதேன் இங்க (blog)வந்தேன்...

என்னங்க பண்றது...பொழுது போவமடேங்குது......சுத்தி பார்க்க போவலாம்னா இந்த ஊருல கவர்மெண்டு பஸ் கேடயாதாம்....நம்ம மெட்ராஸ்ல கவர்மெண்டு பஸ்ஸு இல்லன்னா பொழப்பே கெடயாது...இங்க எல்லாம் காருலதான் போறாய்ங்க....என்னத்த சொல்லறது.....ஊரும் சுத்த முடியாம பக்கத்துக்கு வீட்டுலயும் கதப்பேச முடியாம...முடியலங்க முடியல......எவ்வளவு நாள்தான் போர் அடிக்கத மாறியே நடிக்கிறது?......

அதாங்க சொல்லிபுட்டேன்.....யாராவது அமெரிக்கா வந்தா அதுவும் அட்லாண்டாங்கற இந்த ஊருக்கு வந்தா கார் வாங்க தனியா காசு எடுத்துக்கிட்டு வந்துபுடுங்க.....இல்ல வாழ்க்கையே வீட்டுக்குள்ள முடங்கிடும்.....

தயவு பண்ணி யாரவுது என்னையும் உங்க கொட்டத்துல சேர்த்துக்கோங்க...எனக்கும் பொழுது போவும்....இப்படி எழுதவும் போலம்பவும் ஆள் வேண்டாமா?
சரி....இதோட இந்த பதிப்ப முடிச்சுக்கிறேன்...இனியாவது கொஞ்சம் சந்தோஷமா எழுதற சந்தர்ப்பம் வர்றதான்னு பாப்போம்.....

எல்லா தலைங்கக்கிடேயும், என்ன போல புது வரவுங்களுக்கிடேயும் இருந்து உத்தரவு வாங்கிக்கிரேனுங்க................

டாட்டா....பை....பை...ங்கோ!!!!!!!!!!!!!

Reactions: 

12 Response to "அமெரிக்காவுக்கு நானும்தானே போனேன் ..."

 1. கபீஷ் says:
  9 April 2010 at 4:42 PM

  ் வாங்க பொலம்பல் க்ளப்ல ஐக்கியம் ஆகிடுங்க:)

 2. பழமைபேசி says:
  9 April 2010 at 5:14 PM

  வாங்க வாங்க.... நீங்களும் எங்கள்ல ஒருத்தர்தான்!

 3. Udukkai says:
  10 April 2010 at 9:14 AM

  அப்பாடா ஒரு வழியா நம்மளையும் நாலு பேரு கவனிக்கறாங்க.....
  இத விட என்ன வேணும்?
  இனி பூந்து கலக்கிடுவோம்ல...

 4. அறிவன்#11802717200764379909 says:
  10 April 2010 at 10:03 AM

  வாங்க..அதான் தமிழ்மணத்தில் இணைந்திருக்கறீர்களே...

  கவனிக்கப்படுவீர்கள்..நிறையப் படியுங்கள்,எழுதுங்கள்..

 5. அறிவன்#11802717200764379909 says:
  10 April 2010 at 10:03 AM

  Pl remove word verification in comment section settings..it is a nuisance..

 6. முகுந்த் அம்மா says:
  11 April 2010 at 8:52 PM

  Welcome to the club. Almost everybody had a similar feeling after coming to america, just like you. Dont worry, If you have interest in reading ask your husband to drop in the library, you can even take your computer and browse there.

 7. துளசி கோபால் says:
  11 April 2010 at 9:29 PM

  உடுக்கை அடிச்சுக்கிட்டே வந்து ஜோதியில் ஐக்கியம் ஆனதுக்கு முதலில் நம்ம வாழ்த்து(க்)களைப் புடியுங்க!

 8. வல்லிசிம்ஹன் says:
  12 April 2010 at 12:46 AM

  Mudhalla appadiththaanpaa irukkum . appuram, america maathiri undaa apdinnu keppeenga. welcome to pathivulakam.

 9. தீபக் வாசுதேவன் says:
  24 April 2010 at 4:26 PM

  அமரிக்க மண்ணில் உங்களை வரவேற்கும் உங்கள் தமிழ்ச் சகோதரன்! உங்கள் வரவு நல்வரவாகுக!!

 10. பாரதி பரணி says:
  26 April 2010 at 5:00 PM

  நன்றிங்க தீபக்...என்ன உங்க சகோதரியா போட்டதுக்கு மிக்க மகிழ்ச்சி...

 11. அமைதி அப்பா says:
  28 April 2010 at 8:40 PM
  This comment has been removed by the author.
 12. அமைதி அப்பா says:
  28 April 2010 at 8:45 PM

  உங்களுடைய பொழுது உபயோகமாகக் கழிய, நிறைய படிங்க, நிறைய புதியத் தகல்வல்களை, எங்களுக்குத் தாருங்கள்.
  நேரம் கிடைத்தால், http://amaithiappa.blogspot.com படித்து, கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.
  நன்றி.

Post a Comment