"பையா" ஒரு அனுபவம்

முன்குறிப்பு:
இங்கு (US) வந்த ஒரு மாதமாய் எங்களுக்கு அனைத்து வகையிலும் பேருதவியாய் இருக்கும் திரு. பிரகாஷ் (என் கணவரின் நண்பர்) அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

"பையா" ஒரு அனுபவம்:

எனக்கு ஒரு படமாவது முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாளாக உண்டு. பல சூழ்நிலைத் தடைகளினால் அது நிராசையாகவே இருந்து வந்தது. பள்ளி பருவத்திலும் சரி, கல்லூரி நாட்களிலும் சரி இது மட்டும் நிறைவேறவே இல்லை.

அனால் சென்ற வாரம் வெள்ளிகிழமையில் அது நிறைவேறியது. அதுவும் இரவு காட்சி. கேட்கவா வேண்டும்??மனம் குழந்தையாய் மாறி குதூகலித்தது. 40 நிமிட பயணம். அழகாய் தானிருந்தது.

"பையா" முன் பாதி இளமையின் துள்ளலும், பின் பாதி காதலின் வேகமும் நிறைந்திருந்தது. பழமை கதையை, புதிய காட்சி திறனோடு அருமையாக கொடுத்திருகின்றார்கள். இயற்கை ரசிகர்களுக்கு இப்படத்தில் வரும் பல இடங்கள் கண்களுக்கு விருந்து. யுவனின் இசை மழையில் அனைத்துப் பாடல்களும் மீண்டும் கேட்க தூண்டும்.
படம் மிக வேகமாக முடிந்தது. மீண்டும் வீட்டிற்கு வருகையில் அந்த கார் பயணம் நமக்கு படத்தை நினைவுப் படுத்தியது.

நீண்ட நாள் ஆசையும் நிறைவேறியது, பார்க்கத்தகுந்த படமும் அமைந்தது என் அதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன்.

என்ன நண்பர்களே நான் சொல்வது?

4 Response to ""பையா" ஒரு அனுபவம்"

  1. சுடுதண்ணி says:
    11 April 2010 at 4:44 pm

    முதல் நாள் முதல் காட்சி, உங்கள் ஆசை நிறைவேறியதற்கு வாழ்த்துக்கள் :). தொடர்ந்து எழுதுங்க.

  2. ILA (a) இளா says:
    11 April 2010 at 8:31 pm

    நல்லா ஆரம்பிக்கிறீங்க, சட்னு முடிச்சுடறீங்களே. இன்னும் நிறைய அனுபவத்தையும், கொஞ்சம் சேர்த்து எழுதுங்களேன். ட்விட்டர் மாதிரி எழுதறீங்க. கொஞ்சம் விளக்கமாவும் எழுதுங்களேன். வாழ்த்துக்கள்

  3. ஜீவன்பென்னி says:
    12 April 2010 at 12:58 am

    படிக்குறதுக்குள்ள முடிஞ்சுபோச்சே. தொடர்ந்து எழுதுங்க.

  4. பாரதி பரணி says:
    12 April 2010 at 10:16 am

    ஊருக்கு புதுசுங்க...பழக பழக...திறமைய வளத்துக்கிரேனுங்க...உங்க ஆதரவுக்கு நன்றிங்க

Post a Comment