சொர்க்கமும்,நரகமும்...

வான்மகளின் நீல அழகில்
கதிரவன் ஓங்கி நின்று நிலமகளின்
அழகினை ரசிப்பதுவும்...

காலைப்பனியும்
அதில் நனைந்த மண் சாலையும் ,மலர்களும்
தென்னஞ்சோலையும்
அதின் சில்லென்ற காற்றும்

குருவிகளின் கூடும்
அதை போன்ற
குடிசை வீடுகளும்
சாணத்தின் வாசனையில்
மின்னிடும் வண்ணக்கோலங்களும்

கூடிவிளையாடும் குழந்தைகளும்
ஆடிப்பாடும் பருவப்பேண்டிரும்

கிராமத்தின் அழகே
கண்கொள்ளாக் காட்சியன்றோ
மனம்
கொள்ளை போகும் வாழ்க்கையன்றோ...


இரவும் பகலும் தெரியா
நகரத்தில்
நேரம் குறித்து விடியல் கண்டு
மாசு நிறைத்த வாகனப் புகையில்
நாற்றம் சகித்து
அலுவல் செல்லும்
மனிதர்களும்,
கூடிவிளையாட நேரமின்றி
புத்தக போதியினிலே புதையும்
குழந்தைகளும்,
அந்தோ கொடுமையன்றோ...

மக்கள் தொகையின்
அடர்த்தியினால்
வீதிகள் என்ற சந்துகளில் மக்கள்
நெரிந்து வாழும் வாழ்க்கையும்
மனத்தைக் கொள்ளும் காட்சியன்றோ...

கிராமத்து தேவதையின்
வரமற்ற எந்நகரமும்
நரகம்தானே...

2 Response to "சொர்க்கமும்,நரகமும்..."

  1. ஜீவன்பென்னி says:
    23 April 2010 at 1:59 pm

    //கிராமத்து தேவதையின்
    வரமற்ற எந்நகரமும்
    நரகம்தானே...//

    உண்மையான வரிகள்.

    இப்போ கிரமங்களும் நகரமா மாறிக்கிட்டு இருக்கு.

  2. பாரதி பரணி says:
    23 April 2010 at 4:29 pm

    உண்மைதான் ஜீவன்பேன்னி. கிராமங்களின் சிறப்பு அறியாத மக்கள் நகர மோகம் பிடித்து நரகத்தில் வாழ பழகிவிட்டார்கள்.

Post a Comment