தலைகனம் இல்லாதவர்

தங்க தட்டென தகிக்கும் சூரியனை தனக்குள் அடக்கிவிடும்...



பல கவிஞர்களின் சிந்தனை சுரங்கம்
காதலர்களின் துணைவன்
குழந்தைகளின் பிரம்மாண்டம்

மீனவர்களின் மாதா, பிதா, குரு, தெய்வம்
வீடற்றவர்களின் குளியலறை
ஏழை மக்களின் வியாபார ஸ்தலம்

விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி சுரங்கம்
வியாபாரிகளின் பரிவர்த்தனை சாலை
நாடுகளுக்கோ எல்லைகோடு

கோடானுகோடி உயிர்களின் வாழ்விடம்
சிலருக்கு வாழ்க்கையின் ஆரம்பம்
சிலருக்கு வாழ்க்கையின் முடிவு...

இன்னும் எத்தனையோ பெருமைகளுடன்
அமைதியாய் ....
கடல்.!!!

6 Response to "தலைகனம் இல்லாதவர்"

  1. பழமைபேசி says:
    29 April 2010 at 8:25 pm

    கடல்...
    எல்லாம் கடந்தவர்!!

  2. பாரதி பரணி says:
    30 April 2010 at 9:14 am

    உங்கள் கருத்துரைக்கு நன்றிங்க பழமை பேசி....

  3. அமைதி அப்பா says:
    30 April 2010 at 11:18 am

    //தங்க தட்டென தகிக்கும் சூரியனை தனக்குள் அடக்கிவிடும்...//

    அற்புதமான வரிகள்.

  4. பாரதி பரணி says:
    30 April 2010 at 6:01 pm

    நன்றிங்க....அமைதி அப்பா

  5. venkatesh gomathinayagam says:
    2 May 2010 at 6:30 am

    நல்லாருக்கு

  6. Ahamed irshad says:
    3 May 2010 at 6:02 am

    கடல் கவிதை அருமை....

Post a Comment