கொத்து சப்பாத்தி

தேவையானவை:

சப்பாத்தி - 8
எண்ணெய் - 4 தேக்கரண்டி
வெங்காயம் - 1 (பெரியது,பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
காரட் - 1 (துருவியது)
ப.மிளகாய் - 2
முட்டை - 2
மிளகு தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - தேவையான அளவு
கொத்துமல்லி தழை - தேவையான அளவு
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி

செய்முறை:

1. சப்பாத்தியை தோசைக்கல்லில் இட்டு எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு உளுந்து தாளிக்கவும்.
3. பின் கருவேப்பிலை, ப.மிளகாய் மற்றும் வெங்காயம் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
4. இத்துடன் கொத்துமல்லி, தக்காளி மற்றும் காரட் மூன்றையும் சேர்த்து வதக்கவும்.இவை வதங்கியவுடன் மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி சப்பாத்தியை கலந்து கிளறி விடவும்.
5. சப்பாத்தி நன்றாக வதங்கிய பதத்திற்கு வந்தவுடன் இரண்டு முட்டைகளையும் உடைத்து அதில் ஊற்றி கிளறவும்.
6. சப்பாத்தி கட்டி பிடிக்காமல் உதிரியாக இருக்கும்படி கிளறிவிடவும். முட்டை சப்பாத்தியுடன் கலந்து பொரிந்த பதத்திற்கு வந்ததும் கொத்து சப்பாத்தி தயார்.

பி.கு 1 : சிக்கன் குருமா இருந்தால் ஒரு குழம்பு கரண்டி அளவிற்கு ஊற்றி கிளறி விட்டால் சுவை நன்றாக இருக்கும்.
பி.கு 2 : சைவப்பிரியர்கள் முட்டைக்கு பதில் பீன்ஸ் முட்டை கோஸ் ஆகியவற்றை பொடியாக நறுக்கி காரட்டுடன் சேர்த்து வதக்கிவிட்டு பின் கூறியவற்றை போல சேய்துக்கொள்ளலாம்.
பி.கு 3 : மசாலா வாசம் வேண்டுமென்றால் இரண்டு பட்டை, கிராம்பு தாளித்து, இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக்கொள்ளவும்.
பி.கு 4 : சப்பாத்திக்கு பதிலாக பரோட்டாவை சேர்த்து கொண்டால் கொத்து பரோட்டா தயார்.


பின் குறிப்பே ஒரு செய்முறை அளவுக்கு இருக்குன்னு நீங்க ஏசுறது எனக்கு கேக்குது.இருந்தாலும் உங்களுக்கு கொஞ்சம் டிப்ஸ் தரலாமேன்னுதான்....கோவிச்சுக்காதீங்க... :) :)

9 Response to "கொத்து சப்பாத்தி"

  1. ஜீவன்பென்னி says:
    25 April 2010 at 1:21 am

    சாப்டாச்சுங்க, செம டேஸ்டு.

  2. பாரதி பரணி says:
    25 April 2010 at 8:57 am

    ரொம்ப நன்றிங்க.. :)

  3. bandhu says:
    26 April 2010 at 5:11 pm

    ரெசிபி போட்டதற்கு நன்றி. It is now complete!

  4. அன்புடன் மலிக்கா says:
    26 April 2010 at 11:47 pm

    ரெசிபியின் குறிப்பு சூப்பர்.
    http://niroodai.blogspot.com/2010/04/blog-post_27.html

  5. Unknown says:
    27 April 2010 at 12:13 am

    இது இன்னொரு கொத்து புரோட்டானு வந்தேன்..
    சாப்புடுற அயிட்டமா.?

  6. Ahamed irshad says:
    27 April 2010 at 12:21 am

    டேஸ்ட் ஒகே...

  7. Bharathibharani says:
    27 April 2010 at 7:58 am

    நன்றி ரவி அவர்களே...

  8. பாரதி பரணி says:
    27 April 2010 at 8:01 am

    மலிக்கா...ரெசிபியை சூப்பர்னு சொல்லாம விட்டுடீங்களே.... :(

  9. பாரதி பரணி says:
    27 April 2010 at 8:03 am

    இர்ஷாத் உங்கள் கருத்துக்கு நன்றிகள்...

Post a Comment